என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வைகாசி திருவிழா"
- கடந்த மாதம் வைகாசி திருவிழா விமரிசையாக தொடங்கியது.
- அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பழனி:
பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி கே.வேலூரில் அமைந்துள்ள மண்டு காளியம்மன், உச்சி காளியம்மன் கோவிலில் கடந்த மாதம் வைகாசி திருவிழா விமரிசையாக தொடங்கியது. திருவிழாவின் ஒரு பகுதியாக சண்முகநதியில் இருந்து மேளதாளங்களுடன் புனித நீர் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இரவு அம்மன் ரத ஊர்வலம் நடைபெற்றது. இன்று காலை நடைபெற்ற பூக்குழி இறங்கும் விழாவில் 5000க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சுமார் 4 மணி நேரம் நடந்த பூக்குழி திருவிழாவை ஏராளமான பொதுமக்கள் கண்டு பரவசமடைந்தனர்.
கோயில் முறைகாரர் முதலில் இறங்கியவுடன் பக்தர்கள் வரிசையாக பூக்குழி இறங்கினர். 2 கைகளிலும் தீச்சட்டி, குழந்தைகள், கரும்பு தொட்டிலில் குழந்தை, அம்மன் வேடமணிந்து என பல்வேறு வகையில் பக்தர்கள் பூக்குழி இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். மேலும் ஒரு பக்தர் நாதஸ்வரம் இசைத்தபடியே பூக்குழி இறங்கினார். தொடர்ந்து கிடா வெட்டுதல், பொங்கல் வைத்தல் என விழா நடைபெற்றது.
இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். பக்தர்களின் வருகை அதிகமாக காணப்பட்டதால் இன்ஸ்பெக்டர் தென்னரசு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- ராஜஅலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- தங்கரத புறப்பாடு நடந்தது.
பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கார்த்திகை உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்துக்கான (வைகாசி) கார்த்திகை உற்சவ விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது.
பின்னர் 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சந்நியாசி அலங்காரமும், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரமும் நடைபெற்றது. தொடர்ந்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரம், பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையில் வைதீகாள் அலங்காரம் செய்யப்பட்டது.
அதன்பிறகு மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜஅலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் இரவு 9 மணிக்கு ராக்கால பூஜையில் பல்வேறு வண்ண மலர்களால் சுவாமிக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது.
கார்த்திகை உற்சவத்தையொட்டி மாலை 6 மணிக்கு கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் விளக்கு ஏற்றி வழிபட்டனர். பின்னர் 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் உட்பிரகாரத்தில் வலம் வந்தார்.
இதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு மேல் தங்கரதத்தில் எழுந்தருளினார். அப்போது சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதையடுத்து தங்கரத புறப்பாடு நடந்தது. இதில் 115 பக்தர்கள் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தி பங்கேற்றனர்.
கார்த்திகை உற்சவத்தையொட்டி பழனி முருகன் கோவிலில் நேற்று காலை முதலே பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர். இதனால் தரிசன வழிகள், மலைக்கோவிலுக்கு செல்வதற்கான மின்இழுவை ரெயில்நிலையம் ஆகிய இடங்களில் கூட்டம் காணப்பட்டது.
- திருவிளக்கு பூஜைகள், கிராமத்து தெம்மாங்கு நிகழ்ச்சி நடந்தது.
- மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது.
அலங்காநல்லூர் அருகே சின்ன இலந்தைகுளம் கிராமத்தில் கோட்டை கருப்பசாமி, மண்டு சோலைச்சி, அசையாமணிகட்டி, அம்மச்சி, மந்தைஅம்மன், ஆதிசிவன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு வைகாசி திருவிழா நடைபெற்றது. இதில் விநாயகருக்கு கணபதி ஹோமம், தீபாராதனை நடந்தது.
மாலையில் திருவிளக்கு பூஜைகள், கிராமத்து தெம்மாங்கு நிகழ்ச்சியும் நடைபெற்றது. மறுநாள் குட்டிமேய்க்கிபட்டி சென்று மந்தை அம்மன், அய்யனார் சுவாமி குதிரை வாகனத்தில் மேளதாளங்கள் முழங்க சின்ன இலந்தை குளம் கிராமத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அம்மனுக்கு நகை அலங்காரம் செய்து சக்தி கிடாய் வெட்டுதல், அம்மச்சி அம்மன் கோவிலில் இருந்து சக்தி கரகம் எடுத்து முளைப்பாரியுடன் ஊர்வலமாக மந்தை அம்மன் கோவிலுக்கு சாமி சென்று அடைந்தது.
விழாவில் நேர்த்திக்கடனாக மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுதல், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், பூச்சொரிதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது . அதைத்தொடர்ந்து மாலை மந்தை அம்மன் முளைப்பாரியுடன் பூஞ்சோலை சென்றடைதல் மற்றும் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை சின்ன இலந்தைகுளம் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
- பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது.
- சிறப்பு அலங்காரத்தில் முத்து மாரியம்மன் தேரில் எழுந்தருளினார்.
நாகை வெளிப்பாளையத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் கிளி, குதிரை, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் முத்து மாரியம்மன் தேரில் எழுந்தருளினார்.
இதையடுத்து திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேரானது பல்வேறு வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து மாலை செடில் உற்சவம் நடைபெற்றது.
- இன்று விரதம் இருந்து சிவவழிபாடு செய்வது உத்தமம்.
- இந்தநாளில், ஞானமும் யோகமும் தந்தருளும் சிவனாரை விளக்கேற்றி வழிபடுவோம்.
புண்ணியம் நிறைந்த வைகாசி மாதம் என்று ஞானநூல்கள் போற்றுகின்றன. இந்த வைகாசி மாதத்தில், விசாக நட்சத்திர நாள் என்பது முருகப்பெருமானுக்கு உரிய அற்புதமான நாள். அதேபோல், வைகாசிச் செவ்வாயும் வெள்ளியும் அம்பிகைக்கு உகந்த நாள்.
விசாக நட்சத்திரநாளில் முருக வழிபாடு மிகுந்த விசேஷம். அதேபோல், அம்பிகையை ஆராதிக்க, வாழ்வில் சங்கடங்கள் அனைத்தும் விலகிவிடும். சந்தோஷங்கள் பெருகும்.
சோமவாரம் என்றால் திங்கட்கிழமை என்று அர்த்தம். வைகாசி மாதத்தின், திங்கட்கிழமைகள் ஈஸ்வர வழிபாடு ரொம்பவே வலிமையைத் தரக்கூடியது என்கிறார்கள் ஆச்சார்யர்கள். திங்கட்கிழமைகளில், விரதம் இருந்து சிவ ஸ்துதி பாராயணம் செய்து சிவபெருமானை தீபாராதனை காட்டி பிரார்த்தனை செய்வது உத்தமம். ருத்ரம் ஜபிப்பது, எதிரிகளையும் தீய சக்திகளையும் அழிக்கவல்லது.
வைகாசி மாதத்தின் கடைசி சோமவாரம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இந்தநாளில், விரதம் இருந்து வீட்டில் விளக்கேற்றுங்கள். சோம வார நாளில், சோமன் எனப்படும் திங்கள் எனப்படும் சந்திரன் எனப்படும் நிலா உதயமாகும் மாலை வேளையில் விளக்கேற்றுங்கள். முடிந்தால், கிடைத்தால், சிவனாருக்கு வில்வம் சார்த்துங்கள். குடும்பமாய் அமர்ந்து சிவநாமம் சொல்லுங்கள். தேவார, திருவாசகப் பாடல்களைப் பாடுங்கள் அல்லது ஒலிக்கவிடுங்கள். முக்கியமாக, நோய் தீர்க்கும் பதிகங்களைப் பாடி பரமேஸ்வரனைப் பிரார்த்தனை செய்யுங்கள்.
சிவனாருக்கு தயிர்சாதம் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். ஞானமும் யோகமும் தந்தருள்வார் சிவனார்.
தென்னாடுடைய சிவனே போற்றி.
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
- காளியம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
- அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது.
திருக்கடையூர் அருகே திருப்பஞ்சாக்கையில் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வைகாசி திருவிழாயையொட்டி கடந்த 2-ந் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து தினமும் காளியம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதையடுத்து ஆற்றங்கரையில் இருந்து பால்குடம், அலகு காவடி, பறவை காவடிகளுடன் கரகம் புறப்பட்டு வாணவேடிக்கையுடன், மேளதாளம் முழங்க தோட்டம் அன்னப்பன்பேட்டை மெயின் ரோடு வழியாக கோவிலை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து காளியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனை தொடர்ந்து இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் செம்பனார்கோவில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
- திருவிழாவில் தினமும் ராக்கால பூஜைக்கு பின்பு பள்ளியறை பூஜை நடத்தப்படுவதில்லை.
- மூலவருக்கு 16 வகை அபிஷேகம் செய்து பின்னர் கலச அபிஷேகம் நடைபெற்றது.
பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 27-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. திருவிழாவின் 6-ம் நாளில் திருக்கல்யாணம், 7-ம் நாள் தேரோட்டம் ஆகியவை வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவிழாவில் தினமும் ராக்கால பூஜைக்கு பின்பு பள்ளியறை பூஜை நடத்தப்படுவதில்லை. இந்நிலையில் 5-ந்தேதி கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெற்றது.
இதையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலில் உற்சவ சாந்தி பூஜை நடைபெற்றது. மலைக்கோவிலில் உள்ள கைலாசநாதர் சன்னதியில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், சாந்தி கும்பபூஜை, ஹோமம் நடைபெற்று. பின்னர் உச்சிகால பூஜையில் மூலவருக்கு 16 வகை அபிஷேகம் செய்து பின்னர் கலச அபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் உபயதாரர்களான கந்தவிலாஸ் உரிமையாளர்கள் செல்வகுமார், நவீன், நரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
இதேபோல் பெரியநாயகி அம்மன் கோவிலிலும் உற்சவ சாந்தி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு யாகம், கலச அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜை முறைகளை கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வ சுப்பிரமணி மற்றும் குருக்கள் செய்தனர்.
இதையடுத்து கோவிலுக்குள் வசந்த மண்டபத்தில் 9 நாட்கள் தினமும் இரவு 7 மணிஅளவில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளுதல் நடக்கிறது. திருவிழாவின் முத்தாய்ப்பாக வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) விசாக விழா கோலாகலமாக நடக்கிறது. இதனையொட்டி விசாக கொறடு மண்டபத்தில் வள்ளி தெய்வானையுடன் சண்முகப்பெருமாள் எழுந்தருளுவார். திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.
விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளக்கூடிய சண்முகப் பெருமானுக்கு காலையில் இருந்து மாலைவரை இடைவிடாது குடம் குடமாக பால் அபிஷேகம் நடைபெறும். விசாக திருவிழாவையொட்டி துணை கமிஷனர் சுரேஷ் மேற்பார் வையில் கோவிலுக்குள் உள்ள கொறடு மண்டபம் மற்றும் வசந்த மண்டபம் சுத்தப்படுத்தப்பட்டு மெருகு ஏற்றி தயார்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
10 நாட்கள் நடைபெறும் இந்த கோவில் திருவிழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில், பல்லக்கு பூத வாகனம், கைலாச வாகனம், யானை வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், இந்திர விமானம், குதிரை வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 11-ந்தேதி சுவாமி அம்மன் தேரோட்டம் நடைபெற உள்ளது.12-ந்தேதி 10-ம் திருநாளையொட்டி தீர்த்தவாரி உற்சவமும் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி அம்மன் வீதி உலா நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் மற்றும் நிர்வாக செயலாளர் பழனிவேல் பாண்டியன் தேவஸ்தான சரக பொறுப்பாளர் பாண்டியன் மற்றும் நாட்டார்கள், நகரத்தார்கள், தேவஸ்தான அலுவலர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
இந்த வருட வைகாசி திருவிழா வருகிற 27-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் கொடியேற்ற நிகழ்ச்சியில் அதி காலை 4 மணிக்கு முத்திரிப தமிடுதலும், 5 மணிக்கு சிறப்பு பணிவிடையும், 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.
திருக்கொடியை பால. ஜனாதிபதி ஏற்றி வைக்கிறார். பால. லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கி ன்றனர். பள்ளியறை பணிவிடைகளை ஜனா.யுகேந்த், ஜனா.வைகுந்த் ஆகியோர் செய்கின்றனர். பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெறுகிறது அன்று இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இரண்டாம் நாள் இரவு அய்யா வைகுண்ட சுவாமி பரங்கி நாற்காலியில் வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், மூன்றாம் நாள் விழாவில் அய்யா அன்னவாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும்,
4-ம் நாள் பூஞ்சப்பர வாகனத்தில் அய்யா வலம் வரும் நிகழ்ச்சியும், 5-ம் நாள் பச்சை சாத்தி சப்பரவாகனத்தில் பவனி யும், 6-ம் நாள் கற்பக வாகன பவனியும், 7-ம் நாள் சிவப்பு சாத்தி கருடவா கனத்தில் வாகன பவனியும் நடைபெறுகிறது.
வருகிற 3-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 8-ம் திருவிழா நடைபெறு கிறது. அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டசுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரிகிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று மக்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறு கிறது.
தொடர்ந்து இரவு 11 மணிக்கு வடக்கு வாச லில் அய்யாவின் தவக்கோல காட்சியும் தொடர்ந்து அன்னதா னமும் நடைபெறு கிறது. 9-ம் திருவிழாவில் அனுமன் வாகனத்திலும், 10-ம் நாள் இந்திரா வாகனத்திலும் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அடுத்த மாதம் 6-ந்தேதி திங்கள் கிழமை 11-ம் திருவிழா நடைபெறுகிறது.
அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
திருவிழா நாட்களில் தினமும் காலை மாலை பணிவிடையும் மதியம் உச்சி படிப்பும் இரவு வாகன பவனியும் அன்னதானமும் கலை நிகழ்ச்சிகளும் நடை பெறுகிறது.
தொடர்ந்து காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் காளிகா பரமேஸ்வரி சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று (புதன்கிழமை) பவளக்காளி திருநடன உற்சவம் நடக்கிறது.
நாளை மறுநாள் வீரகாளியம்மன் முனீஸ்வரர் ரதத்தில் வீதிஉலாவும், 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) விடையாற்றி உற்சவம், கஞ்சி வார்த்தல், சந்தனகாப்பு அலங்காரத்துடன் விழா முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
அய்யா வழி பக்தர்களின் அய்யா சிவ சிவ அரகரா அரகரா என்று பக்தி கோஷமிட்டனர். பின்னர் திருக்கொடியை பால. ஜனாதிபதி ஏற்றி வைத்தார். பால. லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியறை பணிவிடைகளை ஜனா.யுகேந்த், ஜனா.வைகுந்த் ஆகியோர் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு இனிமம் வழங்கப்பட்டது. தொடர்ந்து வாகன பவனி நடைபெற்றது.
கொடியேற்ற நிகழ்ச்சியில் குமரி நெல்லை தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெற்றது. இன்று இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது.
வருகிற 3-ம்தேதி வெள்ளிக்கிழமை மாலை எட்டாம் திருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டசுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரிகிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று மக்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோலகாட்சியும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. 9-ம் திருவிழாவில் அனுமன் வாகனத்திலும், பத்தாம் நாள் இந்திரா வாகனத்திலும் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அடுத்த மாதம் 6-ம் தேதி திங்கள் கிழமை 11-ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை மாலை பணிவிடையும் மதியம் உச்சி படிப்பும் இரவு வாகன பவனியும் அன்னதானமும், கலையரங்கில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
திருவிழா நாட்களில் தினமும் மூன்று வேளை தலைமைப்பதியின் முன்பு அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை மூலம் அய்யாவழி பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்